'பிரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
|சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
இதற்கிடையில், 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளியன்று அக்.24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அண்மையில் அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் இந்த வரும் அக்டோபர் 21-ந் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.