< Back
சினிமா செய்திகள்
சலார் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!
சினிமா செய்திகள்

சலார் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

தினத்தந்தி
|
8 Jan 2024 2:56 PM GMT

கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சலார்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சலார்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்து வருகிறது. இந்த நிலையில், 'சலார்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் நீல், பிரபாஸ், பிருத்விராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


மேலும் செய்திகள்