< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
|17 Nov 2023 7:11 PM IST
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் வசூலை குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.