< Back
சினிமா செய்திகள்
The famous director who directed the movie Mookuthi Amman 2
சினிமா செய்திகள்

ஆர்.ஜே.பாலாஜி இல்லை... 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

தினத்தந்தி
|
17 Sept 2024 7:27 AM IST

'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவர், நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்திலும், யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அம்மனாக நடித்திருந்த படம் 'மூக்குத்தி அம்மன்'.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது.

இந்த 2-ம் பாகத்திலும் நயன்தாராதான் அம்மனாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இதனையடுத்து ஆர்.ஜே. பாலாஜியே இந்த பாகத்தையும் இயக்குவாரா? இல்லை வேறு ஒரு இயக்குனர் இயக்குவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது.

இந்நிலையில், ரசிகர்களின் அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதன்படி, பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, சுந்தர்.சி கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்