< Back
சினிமா செய்திகள்
உடலில் ஆடையின்றி நடந்து சென்ற பிரபல நடிகை மனநல காப்பகத்தில் சேர்ப்பு
சினிமா செய்திகள்

உடலில் ஆடையின்றி நடந்து சென்ற பிரபல நடிகை மனநல காப்பகத்தில் சேர்ப்பு

தினத்தந்தி
|
23 March 2023 8:17 AM IST

பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா பைனஸ். இவர் ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் எ கேர்ள் வாண்ட்ஸ், ஹேர் ஸ்பிரே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அமண்டா பைனஸ்க்கு தற்போது 36 வயது ஆகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உடலில் ஆடைகள் எதுவும் இன்றி ரோட்டில் நிர்வாணமாக அமண்டா பைனஸ் நடந்து சென்றார். அதை பார்த்த பலரும் அதிர்ச்சியானார்கள். ரோட்டில் சென்ற கார்களை நிறுத்தி டிரைவர்களிடம் அவர் பேசினார்.

ஒரு டிரைவரிடம் தான் மனநல காப்பகத்தில் இருந்து வருவதாக தெரிவித்தார். அந்த டிரைவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அமண்டாவை மீட்டு மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே அமண்டா மனநல சிகிச்சை எடுத்துள்ளதாகவும், இடையில் சிகிச்சையை கைவிட்டதால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்