< Back
சினிமா செய்திகள்
சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்
சினிமா செய்திகள்

சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
21 Feb 2024 1:40 PM IST

3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் நிறைவு செய்தார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்