< Back
சினிமா செய்திகள்
அமரன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்
சினிமா செய்திகள்

'அமரன்' படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்

தினத்தந்தி
|
12 Sept 2024 1:19 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளது. இதுகுறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்