டைரக்டரான எழுத்தாளர்
|தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா, தற்போது புதிய படத்தை இயக்கி டைரக்டராகவும் அறிமுகமாகிறார்.
இதில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்து பிரபலமான ஶ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். கிரிஷா குரூப் நாயகியாக வருகிறார். யோகிபாபு, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து அஜயன் பாலா கூறும்போது, ``மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் டாக்டர் அர்ஜூனுக்கும் நன்றி. படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்'' என்றார். ஒளிப்பதிவு: செழியன், இசை:சித்துக்குமார்.