< Back
சினிமா செய்திகள்
கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட டைரக்டர்
சினிமா செய்திகள்

கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட டைரக்டர்

தினத்தந்தி
|
12 April 2023 7:53 AM IST

மராட்டிய மாநிலம் பீமா கொரோகானில் 2018-ல் நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கவுதம் நவ்லாகாவை கோர்ட்டு விடுதலை செய்தது.

நீதிபதியின் இந்த விடுதலை உத்தரவை பலரும் விமர்சித்தனர். காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் பிரபலமான டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரியும் நீதிபதி தீர்ப்பை விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீது டெல்லி ஐகோர்ட்டு தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் வீடியோ கான்பரஸ் மூலம் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராகி மன்னிப்பு கேட்டார். அதை ஏற்காத நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதிக்கு எதிராக டுவிட்டரில் வெளியிட்ட பதிவுக்காக மன்னிப்பு கேட்டார்.

இதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.

மேலும் செய்திகள்