< Back
சினிமா செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை அணிந்த முதலை நெக்லஸ் விலை ரூ.275 கோடி
சினிமா செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை அணிந்த முதலை நெக்லஸ் விலை ரூ.275 கோடி

தினத்தந்தி
|
26 May 2023 6:56 AM IST

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகைகள் விதவிதமாக ஆடைகள், நகைகள் அணிந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அவற்றில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா அணிந்து வந்த முதலை நெக்லஸ் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பலரும் அந்த நகை பற்றி வியந்து பேசினார்கள். அதன் விலை எத்தனை கோடி இருக்கும்? என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் பிரபல நகை வடிவமைப்பாளர், ஊர்வசி அணிந்திருந்தது போலி நகை என்று சாடினார். "கேன்ஸ் பட விழாவில் போலி நகையை அணிந்து இருந்தது வெட்கமாக இருக்கிறது. நமது நாட்டில் பொக்கிஷமான பல நகைகள் உள்ளன. அவற்றை அணிந்து இருக்கலாமே'' என்று கூறினார். இது பரபரப்பானது.

இதற்கு ஊர்வசி ரவுத்தலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குழுவினர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "ஊர்வசி ரவுத்தலா அணிந்து இருந்தது ஒரிஜினல் நெக்லஸ். ரூ.200 கோடியாக இருந்த அந்த நெக்லஸ் விலை இப்போது ரூ.275 கோடியாக உயர்ந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

ஊர்வசி ரவுத்தலா தமிழில் லெஜண்ட் படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்