< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விமல் பிறந்தநாளை கொண்டாடிய 'சார்' படக்குழு
|31 Aug 2024 4:14 AM IST
நடிகர் விமல் பிறந்தநாளை முன்னிட்டு 'சார்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் 'சார்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் விமல் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விமலுக்கு கேக் வெட்டி 'சார்' படக்குழு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர்.
சமீபத்தில் 'சார்' படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.