< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜெயம் ரவி, ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ள 'அகிலன்' படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு
|10 Jun 2022 8:21 PM IST
ஜெயம் ரவி, ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ள ’அகிலன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும் சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அகிலன் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டு உள்ளது.