< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'ரணம்' படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு
|11 March 2024 10:45 PM IST
'ரணம்' படத்தை மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் தயாரித்தது.
சென்னை,
வைபவ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'ரணம்'. வைபவின் 25-வது படமாக வெளியான இந்த படத்தை ஷெரிப் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்தது.
'ரணம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த படத்தை பாராட்டி பதிவை வெளியிட்டார். இந்த நிலையில் 'ரணம்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.