< Back
சினிமா செய்திகள்
சர்ச்சை கதை என  படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
சினிமா செய்திகள்

சர்ச்சை கதை என படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு

தினத்தந்தி
|
1 July 2023 12:14 PM IST

ஹரி உத்ரா இயக்கத்தில் அருண் மைக்கேல், டேனியல், ஆராத்யா, ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி.கருணாநிதி ஆகியோர் நடித்துள்ள 'வில் வித்தை' என்ற படம் சில வருடங்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் நடந்த சிறுமி பாலியல் சம்பவம் உள்ளிட்ட சில உண்மை நிகழ்வுகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் அளிக்க மறுத்தனர். 14 காட்சிகளை வெட்டி நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

இதுகுறித்து டைரக்டர் ஹரி உத்ரா கூறும்போது, "அருண் மைக்கேல் நாயகனாக நடித்துள்ள வில் வித்தை படத்தை சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து சைக்கோ, கிரைம் திரில்லர் படமாக எடுத்துள்ளோம். இதில் சில உண்மை சம்பவங்களும் இருக்கும்.

படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து சான்றிதழ் தர மறுத்தனர். 14 சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்றனர். அப்படி நீக்கினாலும் யூ ஏ சான்றிதழ்தான் தர முடியும் என்றனர். இதனால் அதிர்ச்சியானோம். பின்னர் படத்தை மறுதணிக்கைக்காக மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்பினோம். அங்கு சில சர்ச்சை வசனங்களை நீக்கி விட்டு யூ ஏ சான்றிதழ் அளித்தனர்'' என்றார்.

மேலும் செய்திகள்