< Back
சினிமா செய்திகள்
பிளாஸ்டிக் சர்ஜரியால் முக அழகே கெட்டு விட்டது... பிரபல நடிகையின் ரசிகர்கள் வருத்தம்
சினிமா செய்திகள்

பிளாஸ்டிக் சர்ஜரியால் முக அழகே கெட்டு விட்டது... பிரபல நடிகையின் ரசிகர்கள் வருத்தம்

தினத்தந்தி
|
29 Oct 2022 9:47 PM IST

பிளாஸ்டிக் சர்ஜரியால் உங்களது முக அழகே கெட்டு போய் விட்டது என பிரபல நடிகையின் ரசிகர்கள் சமூக ஊடகத்தில் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.



புதுடெல்லி,


திரைப்பட நடிகர், நடிகையர்களில் பலர் இளமை பொலிவுடன் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்க விரும்பி பல விசயங்களை மேற்கொண்டு வருகின்றனர். முக அழகை பராமரிப்பது, தோல் மற்றும் இளமை தோற்றத்திற்காக பல்வேறு ஒப்பனை விசயங்களில் கவனம் செலுத்துகின்றனர்.

ஒரு சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி உள்பட பல்வேறு மருத்துவம் சார்ந்த விசயங்களில் ஈடுபட்டு தோலின் சுருக்கங்களை மறைத்து, மீண்டும் இளமையாக காட்சி தர முயல்கின்றனர். எல்லோரும் இந்த முறையை பின்பற்றுவதில்லை என்றபோதிலும், ஒரு சிலருக்கு பக்க விளைவுகளையும் அது ஏற்படுத்தி விடுகிறது.

நடிகை கொய்னா மித்ரா கூறும்போது, மூக்கு அழகு சிகிச்சை செய்து, அது விகார தோற்றம் ஏற்படுத்தி தனது நடிப்பு தொழிலையே பாதித்து விட்டது என வருத்தமுடன் கூறினார். நடிகை சுருதி ஹாசன் கூட மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தகவலை சமீபத்தில் வெளியிட்டார். அது எனது முகம். அதனை என்ன வேண்டுமென்றாலும் செய்யும் உரிமை எனக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகையான கத்ரீனா கைப் தனது, போன் பூத் என்ற புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கானுடன் நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி அவருடன் ஒன்றாக நடனம் ஆடினார்.

ஆனால், உடல்நலமுடன் காணப்பட்ட அவரது முகம் வீங்கி போய் உள்ளது என ரசிகர்கள் வேதனைப்பட்டனர். பிளாஸ்டிக் சர்ஜரியால் உங்களது முக அழகே முழுவதும் கெட்டு போய் விட்டது என அவரது ரசிகர்கள் சமூக ஊடகத்தில் தங்களது வருத்தங்களை பகிர்ந்து உள்ளனர்.

அதில் ஒருவர், கேட் ஏன் இப்படி செய்துள்ளார்? என எனக்கு தெரியவில்லை. உண்மையில் அவரை நேசிக்க கூடியவர் நான். பிளாஸ்டிக் சர்ஜரிக்கு எதிரான ஆள் நான் கிடையாது என்றபோதிலும், கத்ரீனா கைப், அவராகவே இல்லை என தெரிவித்து உள்ளார்.

உண்மையில் கடவுள் கொடுத்த ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் டாக்டர் எடுத்து சென்று விட்டனர் என மற்றொருவரும், சொல்வதற்கு வருந்துகிறேன். கத்ரீனா கைப்பின் அழகிய முகம், இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான ரசாயனங்களால் முற்றிலும் கெட்டு விட்டது. உண்மையில் அவர் வயது முதிர்ந்தவராகவும், விகார தோற்றமுடையவராகவும் காணப்படுகிறார் என இன்னொருவரும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்