< Back
சினிமா செய்திகள்
விக்ரம் நடிக்கும் 62-வது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது..!
சினிமா செய்திகள்

விக்ரம் நடிக்கும் 62-வது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது..!

தினத்தந்தி
|
28 Oct 2023 8:21 PM IST

விக்ரம் நடிக்கும் 62-வது படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார்.

சென்னை,

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி 'தங்கலான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் டீசர் நவம்பர் 1-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24-ந்தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் 62-வது படத்தின் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு 'சியான் 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சிந்துபாத்', 'சித்தா' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்குகிறார். ரியா ஷிபு தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த அறிவிப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்