< Back
சினிமா செய்திகள்
தூக்குதுரை படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியானது..!
சினிமா செய்திகள்

'தூக்குதுரை' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியானது..!

தினத்தந்தி
|
17 Jan 2024 2:53 PM IST

'தூக்குதுரை' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு தற்போது 'ட்ரிப்' படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'தூக்குதுரை' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இனியா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மனோஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'தூக்குதுரை' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் இன்று (17.01.2024) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்