< Back
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள பேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது
சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது

தினத்தந்தி
|
5 Feb 2024 10:45 PM IST

'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'கீதா கோவிந்தம்', சர்க்காரு வாரி பட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் இருந்தது. 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சித் ஶ்ரீராம் பாடியுள்ள 'நந்த நந்தனா' என்ற பாடல் வருகிற 7-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்