< Back
சினிமா செய்திகள்
ஜிகர்தண்டா-2 படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!
சினிமா செய்திகள்

'ஜிகர்தண்டா-2' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!

தினத்தந்தி
|
8 Oct 2023 2:47 AM IST

'ஜிகர்தண்டா-2' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் வருகிற 9-ம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா-2 படத்தின் முதல் பாடலுக்கு நடனமாட நேரம் நெருங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்