< Back
சினிமா செய்திகள்
10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அறிவிப்பு... தேசிங்கு ராஜா-2 படப்பிடிப்பு தொடக்கம்...!
சினிமா செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அறிவிப்பு... தேசிங்கு ராஜா-2 படப்பிடிப்பு தொடக்கம்...!

தினத்தந்தி
|
12 Jan 2024 8:40 PM IST

'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இணைந்துள்ளார்.

சென்னை,

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி போன்ற மென்மையான காதல் படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில். இவர் 2012ம் ஆண்டுக்கு பிறகு காதல் படங்களை இயக்குவதை தவிர்த்து காமெடி படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான மனம் கொத்தி பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், தேசிங்கு ராஜா போன்ற காமெடி படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ். மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் நடிக்கின்றனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வருகிற கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்