சித்தார்த்துடன் பார்ட்டிக்கு சென்ற நடிகை
|மும்பையில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ள சித்தார்த் காரில் சென்றார்.
மும்பை,
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதிராவ் ஹைத்ரியும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் காதல் குறித்து இருவரும் பதில் கூறாமல் மவுனத்தை கடைபிடித்து வருகிறார்கள்.
ஆனாலும் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர், 'அன்பே... ஆருயிரே...' என்று கொஞ்சி கொள்கிறார்கள். பல இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் யாராவது கேட்டால் மவுனம் சாதிக்கிறார்கள்.
இதற்கிடையில் மும்பையில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ள சித்தார்த் காரில் சென்றார். அந்த காரில் அதிதிராவும் இருந்தார். இதையடுத்து ரசிகர்களும், சில புகைப்பட கலைஞர்களும் அந்த காரை விரட்டி சென்று புகைப்படங்கள் எடுத்தனர்.
ரசிகர்களை பார்த்ததும் காரில் இருந்த அதிதிராவ் தனது முகத்தை மறைத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழில் 'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'சைக்கோ', 'ஹேய் சினாமிகா' ஆகிய படங்களில் நடித்துள்ள அதிதிராவ், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.