ரூ.4.80 லட்சம் விலையில் புடவை அணிந்த நடிகை
|நடிகை சோபிதா துலிபாலா அணிந்துள்ள ஒரு புடவை அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த புடவையின் விலை ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் என்று தெரிந்து அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமான சோபிதா துலிபாலா தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். மங்கிமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
சமந்தாவை விவாகரத்து செய்துள்ள நாகசைதன்யா தற்போது சோபிதா துலிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. சோபிதா துலிபாலா சமூக வலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். விதவிதமான ஆடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த நிலையில் சோபிதா அணிந்துள்ள ஒரு புடவை அனைவரையும் கவர்ந்துள்ளது. அதன் விலையை தெரிந்து கொள்ள பலரும் இணைய தளத்தில் தேடினர். இறுதியில் சோபிதா துலிபாலா அணிந்துள்ள புடவையின் விலை ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் என்று தெரிந்து அதிர்ச்சியானார்கள். தற்போது அந்த புடவையுடன் கூடிய சோபிதா துலிபாலா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.