< Back
சினிமா செய்திகள்
பிக்பாசில் அடிதடி சண்டை போட்டியாளரை முகத்தில் குத்தி தாக்கிய நடிகை
சினிமா செய்திகள்

பிக்பாசில் அடிதடி சண்டை போட்டியாளரை முகத்தில் குத்தி தாக்கிய நடிகை

தினத்தந்தி
|
11 Nov 2022 8:05 AM IST

இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார்.

நடிகர் சல்கான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை வட இந்தியாவில் நிறைய பேர் பார்க்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய டைரக்டர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார். சஜித்கானை பிக்பாசில் இருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதினார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது அடிதடி சண்டை நடந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை அர்ச்சனா கவுதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடல்நிலையும் குன்றியது. இதையடுத்து அர்ச்சனா கவுதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்