உருவக்கேலியால் நடிகை வருத்தம்
|பிரபல நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் பிரகாஷ்ராஜினின் தோனி படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடித்தார். கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிக படங்கள் நடித்து இருக்கிறார். துணிச்சலாக கவர்ச்சி காட்சிகளிலும் நடிக்கிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் உருவக்கேலிக்கு தான் ஆளானதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், "நடிகைகளை உருவக்கேலி செய்கின்றனர். இதை அவர்களின் உரிமையாகவும் கருதுகின்றனர். எனக்கும் இந்த அவமதிப்புகள் ஏற்பட்டன. எனது மூக்கு சரியில்லை என்றனர். மூக்கை காரணமாக வைத்தே நிறைய பேர் பட வாய்ப்புகள் அளிக்க மறுத்தனர்.
மேலும் எனது உடல் தோற்றத்தையும் கேலி செய்தனர். ஒரு கட்டத்தில் நான் கொஞ்சம் எடை அதிகமானேன். 3 முதல் 4 கிலோ வரை எடை அதிகரித்ததால் ஒரு பட வாய்ப்பை இழந்தேன்'' என்றார்