உருவகேலியால் நடிகை வருத்தம்
|சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை உருவகேலி செய்தனர் என்று நடிகை ரவீனா தாண்டன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரவீனா தாண்டன் தமிழில் அர்ஜுனின் சாது, கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்தி நடிகர் அக்ஷய்குமாரை ரவீனா தாண்டன் திருமணம் செய்வதாக இருந்தது. நிச்சயதார்த்தமும் முடிந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இருவரும் பிரிந்து விட்டனர். 2014-ல் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.
ரவீனா தாண்டன் அளித்துள்ள பேட்டியில், " எனது குழந்தைகளிடம் என்னை பற்றிய எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். எனது காதல் கதைகளை அவர்களிடம் மறைத்தால் எப்போதாவது தெரிந்து கொள்வார்கள். அப்போது நிலைமை மோசமாக மாறிவிடும்.
அதனாலேயே அதையும் சொல்லி விடுகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் நிலைமை மோசமாக இருந்தது. என்னை பற்றி மோசமாக பேசினார்கள். உருவகேலி செய்தனர். எனக்கு எதிராக பொய் தகவல்களை பரப்பினார்கள். சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எங்கள் கருத்துக்களை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அந்த காலத்தில் பொய் தகவல்கள்தான் பொதுமக்களை சென்று அடைந்தது'' என்றார்.