< Back
சினிமா செய்திகள்
காதல் வதந்திக்கு நடிகை விளக்கம்
சினிமா செய்திகள்

காதல் வதந்திக்கு நடிகை விளக்கம்

தினத்தந்தி
|
1 Dec 2022 1:05 PM IST

பிரபாசும், இந்தி நடிகை கிருத்தி சனோனும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு நடிகை கிருத்தி சனோன் வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாசும், இந்தி நடிகை கிருத்தி சனோனும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் பேசினர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கிருத்தி சனோன் விளக்கம் அளித்துள்ளார்.

வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் பிரபாசை காதலிப்பதாக சில இணைய தளங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு திருமண தேதியையும் முடிவு செய்து இருக்கிறார்கள். இது முற்றிலும் வதந்தி, ஆதாரமற்ற தகவல்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்