'கான்'கள் வசிக்கும் பகுதியில் சொகுசு பங்களா வாங்கிய நடிகை
|பிரபல பாலிவுட் நடிகையான திரிப்தி திம்ரி, ரன்பீர் கபூரின் ‘அனிமல்' படத்தில் ஜோயா கதாபாத்திரத்தில் நடித்து பேசப்பட்டார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகையான திரிப்தி திம்ரி, ரன்பீர் கபூரின் 'அனிமல்' படத்தில் ஜோயா கதாபாத்திரத்தில் நடித்து பேசப்பட்டார். அந்த படம் பெரிய அளவில் இவரை பிரபலப்படுத்தியது.
இதையடுத்து ஒரே நேரத்தில் 4 இந்தி படங்களில் அவர் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். திரிப்தி திம்ரி சொந்தமாக வீடு கட்டுவதே தனது லட்சியமாக கொண்டிருந்தார். தனது சொந்த ஊரான உத்தரகாண்டில் வீடு கட்டவும் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்தநிலையில் மும்பையில் அவர் பங்களா வாங்கியிருக்கிறார். ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் பங்களாக்கள் இருக்கும் பாந்த்ரா கார்டர் சாலை பகுதியில், திரிப்தி திம்ரியும் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார்.
ரூ.14 கோடி மதிப்பிலான இந்த பங்களா வீட்டில் சகல வசதிகளும் இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டியுள்ளாராம். திரிப்தி திம்ரியின் அசுர வளர்ச்சியை கண்ட சக நடிகைகளும் வாயடைத்து போயிருக்கிறார்களாம். 'காரணம் இல்லாமலா 'கான்' நடிகர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் வீடு வாங்கியிருக்கிறார்?' என்றும் பேசுகிறார்களாம்.