< Back
சினிமா செய்திகள்
காணாமல் போன நாயை கண்டுபிடிக்க ரூ.8 லட்சம் பரிசு அறிவித்த நடிகை
சினிமா செய்திகள்

காணாமல் போன நாயை கண்டுபிடிக்க ரூ.8 லட்சம் பரிசு அறிவித்த நடிகை

தினத்தந்தி
|
28 Sep 2022 2:51 AM GMT

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான பாரிஸ் ஹில்டன் காணாமல் போன நாயை கண்டுபிடிக்க ரூ.8 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான பாரிஸ் ஹில்டன் செல்லப்பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். அவரது வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். ஒவ்வொரு நாய்க்கும் பெயர் வைத்து அழைத்து ஓய்வு நேரத்தை அவற்றோடுதான் கழிக்கிறார். இந்த நிலையில் டைமண்ட் என்று பெயர் வைத்து அவர் வளர்த்து வந்த நாயை ஒரு வாரமாக காணவில்லை. இதனால் நொறுங்கி போய் இருக்கும் பாரிஸ் ஹில்டன் நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெரிய தொகையை பரிசாக அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து வலைத்தளத்தில் பாரிஸ் ஹில்டன் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது டைமண்ட் என்ற செல்ல நாயை காணவில்லை. இதனால் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். அந்த நாயை கொண்டு வந்து கொடுத்தாலோ அல்லது அதை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தாலோ எந்த கேள்வியும் கேட்காமல் 10 ஆயிரம் டாலர் பரிசாக வழங்குவேன்" என்று தெரிவித்து உள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 555 ஆகும்.

பாரிஸ் ஹில்டன் பதிவு வலைத்தளத்தில் வைரலாகிறது. அதை பார்த்த பலரும் ஒரு நாய்க்கு இவ்வளவு லட்சமா என்று வியப்பை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்