< Back
சினிமா செய்திகள்
மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரண்ய காண்டம் பட நடிகை
சினிமா செய்திகள்

மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்த 'ஆரண்ய காண்டம்' பட நடிகை

தினத்தந்தி
|
17 March 2024 9:31 PM IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இடி மின்னல் காதல்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார் யாஸ்மின் பொன்னப்பா.

கடந்த 2011-ல் வெளியாகி விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படம் 'ஆரண்ய காண்டம்'. மிகத் தாமதமாகவே தமிழ் சினிமாவின் அபூர்வப் படைப்பு என்று ரசிகர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். அந்தப் படத்தின் கதாநாயகி யாஸ்மின் பொன்னப்பா. அந்தப் படத்தில் 'சுப்பு' என்கிற பாலியல் ரீதியாக மிரட்டி ஒடுக்கப்படும் ஓர் இளம் பெண், இறுதியில் வெகுண்டெழுந்து தன் பாதையைத் தானே தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்தில் அட்டகாசம் செய்திருந்தார் யாஸ்மின் பொன்னப்பா.

அப்படிப்பட்டவர், பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மிஷ்கின் உதவியாளரான பாலாஜி மாதவன் எழுதி, இயக்கியிருக்கும் 'இடி மின்னல் காதல்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.



இந்த படத்தில் அஞ்சலி என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாகவும், அந்த கதாபாத்திரம் என்னைத் தமிழ் சினிமாவில் பிஸியாக்கும் என்று உறுதியாக நம்புவதாக யாஸ்மின் பொன்னப்பா கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்