< Back
சினிமா செய்திகள்
விஷால் நடிக்கும்  ரத்னம் படத்தின் 4வது  பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தின் 4வது பாடல் வெளியானது

தினத்தந்தி
|
24 April 2024 6:49 PM IST

'ரத்னம்' படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார்.

சென்னை,

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார்.இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன.இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் 4வது பாடலான "எதுவரையோ " பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான ஹரிஹரன் இப்பாடலை பாடியுள்ளார்.இப்படம் வருகிற 26- ந் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்