< Back
சினிமா செய்திகள்
மற்ற 3 பாகங்களை விட 4-ம் பாகம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும் - சுந்தர்.சி
சினிமா செய்திகள்

'மற்ற 3 பாகங்களை விட 4-ம் பாகம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்' - சுந்தர்.சி

தினத்தந்தி
|
1 April 2024 7:12 AM IST

பேய் படத்தில் அழகிகள் இருக்கவும் ஆசைப்படுகிறேன் என்று சுந்தர்.சி கூறினார்.

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது அரண்மனை படத்தின் 4-ம் பாகம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படம் குறித்து சுந்தர்.சி. பேசும்போது, ''அரண்மனை 4-ம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. மற்ற 3 பாகங்களை விட 4-ம் பாகம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்.

எனது முந்தைய படங்கள்தான் அடுத்தடுத்து பேய் படங்கள் எடுப்பதற்கு எனக்கு தைரியம் கொடுத்தது. என்னை நம்பியே நான் படம் எடுக்கிறேன். சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பேன்.

நமது ஊரில் உள்ள திறமை வேறெங்கும் இல்லை. ஹாலிவுட் திரைப்படங்களில் கூட நமது கிராபிக்ஸை பயன்படுத்துகின்றனர். அரண்மனை 4 படத்திலும் சென்னையில் உள்ள டெக்னீஷியன்களை கொண்டு கிராபிக்ஸ் பணிகள் செய்துள்ளேன்.

பேய் படங்கள் என்றால் பாழடைந்த பங்களா என்று பயத்துடன் ஒரு அமைப்பு இருக்கும். எனது படங்கள் கலர்புல்லாக இருக்கும். பேய் படத்தில் அழகிகள் இருக்கவும் ஆசைப்படுகிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்