< Back
சினிமா செய்திகள்
தங்கலான் படத்தின் 3வது பாடல்  நாளை வெளியாகிறது
சினிமா செய்திகள்

'தங்கலான்' படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகிறது

தினத்தந்தி
|
11 Aug 2024 8:26 PM IST

'தங்கலான்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்

சென்னை,

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்' . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'தங்கலான்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் 3வது பாடலான 'அறுவடை' நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்