மார்வெலின் புதிய அவெஞ்சர்ஸ் படத்தில் மீண்டும் தானோஸ்
|மார்வெலின் புதிய படமான 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி டிபென்ஸ்' படத்தில் மீண்டும் இணையும் தானோஸ் கதாபாத்திரம்.
கலிபோர்னியா,
டிஸ்னிலேண்ட் கலிபோர்னியாவில் நடைபெற்ற டி23 நிகழ்ச்சியில் 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி டிபென்ஸ்' என்ற புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. மார்வெல் ரசிகர்களுக்கு அதிரடி அனுபவத்தை அளிக்கும் வகையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இந்த படத்தில் இணைத்துள்ளனர். அதாவது, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் சூப்பர் வில்லனாக இருந்து, ஹீரோக்களை துவம்சம் செய்த கதாபாத்திரம் மீண்டும் புதிய படத்தில் வர உள்ளது.
அதன்படி, சக்திவாய்ந்த வில்லனான கிங் தானோஸ் கதாபாத்திரம் 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி டிபென்ஸ்' படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் வரும் புதிய அவெஞ்சர்ஸ், கிங் தானோஸை எதிர்த்துப் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் டி23 நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, டிஸ்னிலேண்ட் ஷாங்காய் மற்றும் டிஸ்னிலேண்ட் ஹாங்காங் ஆகிய இரண்டும் புதிய ஸ்பைடர் மேன் படங்களை அறிமுகப்படுத்த உள்ளன. இந்த படங்களும் ஸ்பைடர் மேனின் அதிரடி உலகில் ரசிகர்களை மூழ்கடித்து, தனித்துவமான அனுபவங்களை வழங்க உள்ளது.