< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி - திரிஷா
|5 May 2024 10:53 PM IST
நடிகை திரிஷா நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் 'லேசா லேசா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் இருந்து நடிகையான திரிஷா இன்றும் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் கதாநாயகியாக இருக்கும் திரிஷா நேற்று (மே 4) தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை ஒட்டி நடிகை திரிஷாவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகை திரிஷா தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.