< Back
சினிமா செய்திகள்
உங்கள் அன்புக்கு நன்றி... தளபதி 68 அப்டேட்
சினிமா செய்திகள்

உங்கள் அன்புக்கு நன்றி... தளபதி 68 அப்டேட்

தினத்தந்தி
|
21 Dec 2023 10:12 PM IST

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பாங்காக் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், படத்தின் தலைப்பு Boss (or) Puzzle என டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். ஆனால் தளபதி 68 படத்தின் டைட்டில் Boss (or) Puzzle கிடையாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்