< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மீண்டும் தள்ளிப்போகிறதா 'தங்கலான்' படத்தின் ரிலீஸ்?
|21 Dec 2023 11:04 PM IST
இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை,
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
அடுத்த மாதம் (ஜனவரி) 26-ம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் மார்ச் 29 ஆம் தேதிக்கு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது