< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'தங்கலான்' படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்..!
|8 Dec 2022 5:15 PM IST
இயக்குனர் பா.ரஞ்சித் பிறந்தநாளை முன்னிட்டு 'தங்கலான்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று கூறியிருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விக்ரமும் பா.ரஞ்சித்தும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.