விக்ரமின் 'தங்கலான்' பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் 'தங்கலான்' படத்தின் முதல் பாடலான 'மினிக்கி மினிக்கி' பாடல் வரும் ஜூலை 17 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புரொமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலில் விக்ரம் - பார்வதியின் நடனம் கவனம் ஈர்க்கிறது.