மாளவிகா மோகனன் பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'தங்கலான்' படக்குழு
|போஸ்டர் வெளியிட்டு மாளவிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'தங்கலான்' படக்குழு.
சென்னை,
பேட்ட' படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதன் பிறகு தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் தனுஷின் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காலக்கட்டப் படமான 'தங்கலான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இன்று நடிகை மாளவிகா மோகனன் தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் தற்போது நடித்து முடித்துள்ள தங்கலான் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அடுத்ததாக நடிகை மாளவிகா மோகனன் கார்த்தி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறித்தது குறிப்பிடத்தக்கது.