< Back
சினிமா செய்திகள்
Thangalaan artist Joined Ram Charans RC 16
சினிமா செய்திகள்

ராம் சரண் படத்தில் இணைந்த 'தங்கலான்' பட கலைஞர்

தினத்தந்தி
|
20 Sept 2024 9:19 AM IST

ராம் சரண் நடிக்கும் ஆர்.சி 16 படத்தில் 'தங்கலான்' பட கலைஞர் இணைந்துள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளநிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

சமீபத்தில், இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்தார். இந்நிலையில், இப்படத்தில் 'தங்கலான்' பட கலைஞர் ஒருவர் இணைந்துள்ளார். அதன்படி, விக்ரம் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'தங்கலான்' படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஏகன் ஏகாம்பரம், ராம் சரண் படத்தில் இணைந்துள்ளார். இதனை, புகைப்படம் வெளியிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்