ரிலீசுக்கு முன்பு 'தங்கலான்' மற்றும் 'கங்குவா' படங்களுக்கு வந்த சிக்கல்
|ரிலீசுக்கு முன்பு 'தங்கலான்' மற்றும் ’கங்குவா’ படங்களுக்கு சிக்கல் வந்திருக்கிறது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின், புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருக்கிறது.
அதேபோல், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தையும் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கிறது. இந்நிலையில், ரிலீசுக்கு முன்பு 'தங்கலான்' மற்றும் கங்குவா படங்களுக்கு சிக்கல் வந்திருக்கிறது.
அதன்படி, சுந்தர் தாஸ் என்பவருக்கு ஸ்டூடியோ கிரீன் செலுத்த வேண்டிய கடனில் இன்னும் ரூ.10.35 கோடி ரூபாய் மீதம் இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
தங்கலான் ரிலீசுக்கு முன்பு ரூ.1 கோடி கட்ட வேண்டும் என்றும், ஸ்டூடியோ கிரீனின் மற்றொரு படமான கங்குவா ரிலீஸ் முன்பும் ரூ.1 கோடி டெபாசிட் செய்யவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.