சாய் பல்லவி பிறந்தநாளில் சிறப்பு வீடியோ வெளியிட்ட 'தண்டேல்' படக்குழு
|நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு 'தண்டேல்' படக்குழு சிறப்பு வீடியோவினை வெளியிட்டுள்ளது.
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
சாய் பல்லவி - நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் படம் தண்டேல். இந்தப் படத்தினை சந்தோ மோன்டெடி இயக்கி வருகிறார். இப்படத்தின் பூஜை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதை தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
தண்டேல் படம் ஒரு மீனவனின் காதல் பற்றிய உண்மைக் கதையாகும். இப்படத்திற்கு நாகசைதன்யா தனது உடல் எடையைக் கூட்டியுள்ளார். இப்படம் நல்ல கதைக்களம் கொண்ட படம் என்பதால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளது.