'மாமனிதன்' படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத தம்பி ராமையா
|நடிகர் தம்பி ராமையா 'மாமனிதன்' படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி முக்கிய பிரமுகர்களுக்காக சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று படத்தை பார்த்தனர்.
படத்தை பார்த்துவிட்டு தம்பி ராமையா தேம்பி தேம்பி அழுதார். அவரை சீனுராமசாமி உள்ளிட்டோர் தேற்றினார்கள். அப்போது சீனுராமசாமியை, அவர் கட்டிப்பிடித்து பாராட்டினார்.
இதுகுறித்து தம்பி ராமையா கூறியதாவது:-
''இந்தப் படம் வெளியானபோது என்னால் பார்க்க முடியவில்லை. இப்போதுதான் படத்தை பார்த்தேன். மனதில் எழும் எண்ணங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மெல்லிய உணர்வை வெகுஜன மக்களுக்கு மிகவும் அழகாக கொண்டு சென்றிருக்கிறார் தம்பி (சீனுராமசாமி). ஒவ்வொரு வசனத்தையும் அடிமனதின் ஆழத்தில் இருந்து எடுத்திருக்கிறார். இப்படி ஒரு படைப்பை கொடுத்த இவர் தான் மாமனிதன். சீனு ராமசாமி என்னை விட சின்னவர். இல்லை என்றால் காலை தொட்டு கும்பிடுவேன்''.
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.