< Back
சினிமா செய்திகள்
விஜய்யின் அடுத்த பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
சினிமா செய்திகள்

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

தினத்தந்தி
|
23 May 2022 3:51 PM IST

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய் ஒரு படத்தை முடித்த பிறகு அடுத்த படத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இயக்குனரையும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின்போது முடிவு செய்வார். பீஸ்ட் படத்துக்கு பிறகு தற்போது தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், ஷாம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்க உள்ள 67-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. லோகேஷ் கனகராஜ் உள்பட நிறைய இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் விஜய்யின் 67-வது படத்தை இயக்குவதாக லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே மாநகரம், கார்த்தியின் கைதி, விஜய் நடித்த மாஸ்டர் ஆகிய படங்கள் வந்துள்ளன. தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மேலும் செய்திகள்