விஜயகாந்தை தொடர்ந்து 'கோட்' படத்தில் இணையும் பிரபலம்
|விஜயகாந்தை தொடர்ந்து இன்னொரு பிரபலத்தையும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 'கோட்' படத்தில் இணைத்திருக்கிறார்கள்.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் கொண்டு வந்துள்ளது படக்குழு. இதனால் மீண்டும் விஜயகாந்தை திரையில் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் விஜயகாந்தை தொடர்ந்து இன்னொரு பிரபலத்தையும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் படத்தில் இணைத்திருக்கிறார்களாம். அதன்படி, மறைந்த பாடகி பவதாரணி குரலை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 'கோட்' படத்தில் கொண்டு வந்துள்ளாராம் இயக்குனர் வெங்கட்பிரபு. இந்த தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. பவதாரணி குரலை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.