< Back
சினிமா செய்திகள்
கோட்- அடுத்த கட்டப்படப்பிடிப்பு இந்த இடத்திலா?
சினிமா செய்திகள்

'கோட்'- அடுத்த கட்டப்படப்பிடிப்பு இந்த இடத்திலா?

தினத்தந்தி
|
29 March 2024 3:18 PM IST

'கோட்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா,மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 'கோட்' படக்குழு அடுத்ததாக ரஷியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் படக்குழு ரஷியா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய்க்கு கேரள ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அங்கு நடிகர் விஜய்யை காண்பதற்காக படப்பிடிப்பு தளத்திலும், செல்லும் இடங்களிலும் ரசிகர்கள் குவிந்தனர். அங்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு படத்திற்கு உணர்ச்சிகரமான விசயமாக அமைந்தது.

மேலும் செய்திகள்