வாரிசு வெற்றி கொண்டாட்டம்: விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு வரிசையில் விஜய்...!
|வாரிசு பட வெற்றி கொண்டாட்டம் முடிந்து ஐதராபாத் விமான நிலையம் திரும்பபினார்.
ஐதராபாத்
விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், விடிவி கணேஷ், சரத்குமார், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜூ தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது . வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 'வாரிசு' படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார்.
இதில் விஜய்யுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த் நிலையில் வாரிசு பட வெற்றி கொண்டாட்டம் முடிந்து ஐதராபாத் விமான நிலையம் திரும்பபினார் ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர் இல்லாமல் நடந்து சென்றார். விஜய் மற்ற பயணிகளைப் போலவே பாதுகாப்பு சோதனை வரிசையில் நுழைந்தார், முககவசம் அணிந்து இருந்தார்.