விரைவில்...ரீ-ரிலீசாகும் விஜய்யின் 'மாஸ்டர்'
|விஜய்யின் ’மாஸ்டர்’ படம் ஐரோப்பாவில் ரீ - ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர், லியோ ஆகிய இரு திரைப்படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆகின. இதில் கடந்த 2021-ம் ஆண்டு வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் வெளியாகவில்லை.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் ஐரோப்பாவில் ரீ - ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் கைப்பற்றி இருந்தது. தற்போது இந்த படத்தை விரைவில் ஐரோப்பாவில் திரையிட போவதாக இந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்யின் கில்லி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் ரீ - ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த நிலையில், அடுத்ததாக ஐரோப்பா பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.