< Back
சினிமா செய்திகள்
Thalapathy Vijay and director H Vinoth to start filming for actor’s 69th and alleged final movie from September
சினிமா செய்திகள்

'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு எப்போது? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
12 Aug 2024 10:40 PM IST

நடிகர் விஜய் அடுத்ததாக 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக நடிகர் விஜய் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி, அடுத்த மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்