< Back
சினிமா செய்திகள்
Thalapathy 69: Technical Crew Announced
சினிமா செய்திகள்

'தளபதி 69' படத்தின் அடுத்த அப்டேட்: தொழில்நுட்பக் குழுவினரை அறிவித்த படக்குழு

தினத்தந்தி
|
4 Oct 2024 1:52 PM IST

'தளபதி 69' திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் 'தி கோட்' படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின்ன. அதன்படி இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், 'தளபதி 69' திரைப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது. தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் இணைந்துள்ளார். சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத்தொகுப்பாளராக பிரதீப் ஈ.ராகவ், ஆடை வடிவமைப்பாளராக பல்லவி ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்